Monday, July 27, 2009

நமது சராசரியின் கல்யாணம்!

வணக்கம்! நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என் நம்புகிறேன்! சரி விஷயத்திற்கு வருவோம். என்னுடைய முதல் இரண்டு postingil சராசரியின் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதியிருந்தேன். இப்பொழுது அவரின் கல்யாணம் எப்படி நடந்திற்கும் என்று சிறு கற்பனை அல்லது அனுபவங்களின் கலவையில் ஒரு படைப்பு!



நமது சராசரி பட்டபடிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் வேலை தேடிண்டு இருக்கிறப்ப , வீட்டில் அம்மா ஒரு மதிய நேரம் ஏன்டா நீ ப்ரீயாதான இருக்க போயி நம்ம நாடார் கடையில ஒரு நூறு ml நல்லெண்ணெய் வாங்கிண்டு வா! (இது தான் முதல் அலாரம். என்ன அர்த்தம் தெரியுமோ? சீக்கிரம் வேலை தேடிக்கோடான்னு). படிக்கற காலத்துல அப்பா சராசரிய பார்த்து ப்ளேடு வாங்கிண்டு வர சொன்னா, அம்மா "குழந்தைய கடைக்கு அனுப்பதீங்கோ"! அவனுக்கு நாளைக்கு பரிட்சைன்னு சொல்லுவா! அதே அம்மா வேலை கிடைக்கலேன்னா அப்படியே உல்டா!



சரி! நம்ம சராசரிக்கு வேலை கிடைச்சாச்சு! அம்மா நேக்கு வேலை கிடைச்சாச்சு! உடனே எவ்வளோடா சம்பளம்! பிடிச்சமெல்லாம் போக கைக்கு ஒரு எட்டாயிரம் ரூபா வரும்மா! பரவா இல்லடா! நல்லது இனிமே ஊர் சுத்தாத! நல்ல பையனா இரு. எப்படா இன்க்ரிமென்ட்?. இப்ப தான் ஆர்டேரே வாங்கிருப்பார் நம்ம சராசரி! ஞேன்னு ஒரு முழி முழிப்பார் பாருங்கோ! இது தான் முதல் முழி! daily routine started. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பக்கத்தாத்து பட்டு மாமி ஒரு மாலை பொழுதில் ஆத்துக்கு வரப்ப, ஏண்டி பார்வதி! எப்போடி உன் புள்ளையாண்டானுக்கு கல்யாணம் பண்றதா உத்தேசம்! நம்ம சராசரி ரூம் உள்ள தான் ஏதோ புஸ்தகத்த பொரட்டியபடி இருப்பார் . சமயத்தில் இடி விழுந்தா கூட காது கேக்காது! ஆனா கல்யாணம்னு சத்தம் கேட்டோன, காது ரூமில் இருந்து தனியா பறந்து போய் அந்த மாமியின் வாய்க்கு பக்கத்துல உட்கார்ந்துடும்.

நம்ம சராசரியின் அம்மா கல்யாணமா! இவனுக்கா! பொறுப்பே இல்லாம சுத்தறான் மாமி. கல்யாணம் பண்ணிண்டா எல்லாம் சரியாய் போயிடும்னு மாமி சொல்ல, நம்ம சராசரி மாமிய பார்த்து தெய்வமே என்று மனதிற்குள் புகழத் தொடங்கிடுவான். கல்யாணம் முடிஞ்சோன அதே மாமிய கொல்லாம விடமாட்டேன் சொல்லுவான் அது அப்புறம்..



எங்காத்து சைட்ல ஒரு பொண்ணு இருக்கா! என்னோட ஒர்ப்படியோட நாத்தனார் பொண்ணு! நீ கூட பார்த்திருப்பியே நம்ம நீலு கல்யாணத்துல! கிளிபச்சையில ரெட் பார்டர் போட்டுண்டு வந்தாளே! நம்ம சராசரியின் அம்மா, ஒ! அந்த பொண்ணா! கண்ணுக்கு லக்ஷணமா நன்னா தான் இருந்தா! நம்ம சராசரியும் அந்த கல்யாணத்திற்கு போயிருப்பார் ஆனா பாருங்கோ! அவர் பார்த்திருக்க மாட்டார்!

மாமி நான் அவர் கிட்ட சொல்றேன் . ஒரு நல்ல நாள் பார்த்து போய் பொண்ண பார்த்துட்டு வருவோம்..ஒரு பத்து நாள் கழித்து டேய் இன்னிக்கு 1 hr permission போட்டுட்டு வாடா. நம்ம சராசரி மனசுக்குள் ஒரு சந்தொஷம். ஏன் என்ன விஷயம்? இன்னிக்கு நோக்கு பொண்ணு பார்க்க போறதுடா! சரிம்மா! வந்துடறேன்!

சாயந்திரம் ஆத்துக்கு ஆபீஸ் முதலாளிக்கு ஐஸ் வச்சு சீக்கிரம் வந்து, குளிச்சு, சென்ட் அடிச்சு, பார்மல் டிரஸ் போட்டுண்டு கண்ணாடில பார்த்து.. அய்ய நன்னாவே இல்ல! அப்புறம் ஒரு வழியா ஒரு டிரெஸ்ஸ போட்டுண்டு, அம்மா கால் டாக்ஸி வந்தாச்சா? இன்னும் இல்லடா! அவசரமா மறுபடி கால் பண்ணி விரட்டி, குடும்பமே அந்த டாக்ஸி யில் திணிச்சுண்டு போய் இறங்கும்!


பெண்ணாத்துக்குள்ள போயாச்சு! பொண்ணோட அப்பா வாங்கோன்னு கூப்பிட, பொண்ணோட அம்மா புடவைய தோளோட சுத்திண்டு வாங்கோ மாமி! வந்து உக்காருங்கோ! பிரயாணம் எல்லாம் ஸௌரியம் தானே என்னமோ டெல்லிலேர்ந்து பொண்ணு பார்க்க வந்தா மாதிரி effect கொடுப்பா! நம் சராசரியின் மனசுக்குள் டாக்ஸியில் திணிச்சுண்டு வந்தது எனக்கு தான் தெரியும்னு சொல்லிப்பார். நம்ம சராசரி அப்படியே வீட்டின் ஹாலை பார்க்கறா மாதிரி பொண்ண தேடுவார். ஒரு 10 mins நம்மாள அலைய வச்சு பொண்ண கூபிடுவா! ஜானு காபி எடுத்துண்டு வாமா! நம்ம சராசரி தலைய குனிஞ்சுண்டே கப்பிய வாங்கி ஓர கண்ணால பொண்ண பார்ப்பார். அப்பா அவள் அவருக்கு ஏதோ ரதி தேவதை மாதிரியே இருக்கும்..(கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு பாத்ரூம் கண்ணாடிய பார்த்து உன்ன போய் ரதி தேவின்னு நினைச்சேனே ஐயோ அய்யோன்னு முட்டிப்பார்) அந்த பொண்ணோ ஒரு கேவலமான பார்வை பார்த்து hmm ok தான். பையன பார்த்தா பேக்கா தான் தெரியறான்! . நான் சொன்னத கேட்டா சரி. இந்த மாதிரி ஒரு பேக்கு புருஷனா இருந்தாதான் நம்ம ராஜ்யம் கொடி கட்டி பறக்கும்னு ok சொல்ல நம்ம சராசரி தனக்கு தானே சூன்யம் வச்சுண்டது தெரியாம மனசுக்குள் பாரதி ராஜா பட effectil சந்தோஷமா கிளம்புவார்.




ஜானுவோட ஜானுவாசம்! பலி கொடுக்கற ஆட்ட இழுத்துண்டு போறாப்ல சராசரிய அலங்காரம் பண்ணி வீதி வீதியா கூட்டிண்டு போவா! பாவம் நம் சராசரி. அப்போ அவனுக்கு தெரியாது கூட்டிண்டு போய் போடபோறான்னு! ஈன்னு இளிச்சுண்டே வருவான் பாவம். மறுநாள் காலை நாந்தி முடிஞ்சு முஹுர்த்தம்! மாலை மாற்றினால் கோதை மாலை சாத்தினாள்ன்னு யாரோமூக்கால பாடி அந்த நல்ல பாட்ட கொலை பண்ண, அப்பா மடில பொண்ண உக்கார வச்சு( அநேகமா அப்பாக்கள் எல்லோரும் மனசுக்குள் யப்பா என்ன weighttunnu மாபிள்ளைய பரிதாபமா ஒரு பார்வை பார்த்துண்டே என்னோட இம்சைய உனக்கு தானம் பண்றேன்னு நினைச்சுப்பார்னு நினைக்கிறன்) மாங்கல்ய தாரணம் பண்ணுவார் !



என்ன கல்யாணம் ஆச்சா! மாட்டு பொண்ணு வந்தாளா! மாபிள்ளை வந்தாரா(மாட்டிண்டானா)ன்னு? எல்லாரும் கேட்டு ஓஞ்சு, மதிய கல்யாண சாப்பாட்ல அந்த ஸ்வீட் எடுத்து பொண்ணுக்கு ஊட்டி விடுடானு! ஒரு கிழம் சொல்லும் அதே வேற photo எடுப்பாங்க புண்ணியவான்கள். இங்க போய் அலம்பு அங்க போயி அலம்புன்னு ஒரு கூட்டம் நம்ம நம்ம சராசரிய வறுத்தெடுக்கும். காபி குடிக்கறபோது டேய் போதும்! பாதிய உன் பொண்டாடிக்கு மிச்சம் வைடான்னு வேற சொல்லுவா. அங்க பார்த்தேள்னா ஒரு வாளி நெறைய காபி இருக்கும். ஆனா! எல்லார் கண்ணும் நம்ம சராசரியின் காபி மேல தான் இருக்கும்...




சரி சரி! லஞ்ச் முடிஞ்சு நலுங்கு வைபவம்! ஒரு மனுஷன கிறுக்கனா அடிக்கறதுக்கு இத விட வேற ஏதும் கிடையாது! நக்கல் பண்றோம்னு கொடும பண்ணுவா! ஆண்கள் ஒத்த கையில் தேங்காய அமுக்கி பிடிக்க பொண்ணு(திம்ஸ் கட்ட மாதிரி இருப்பா) ரெட்ட கைய்யாள இழுத்தோன நம்ம சராசரிக்கு ஒரு கைய்யே தனியா போற மாதிரி ஒரு effectla கையா விட்டுடுவான்! விஷயம் தெரியாம பெருசுகள் இவன் சரியில்லன்னு நக்கல் பண்ணுவா..நெறைய அப்பளம் எடுத்து தட்டுல வச்சுருப்பா! நம்ம சராசரி தலைய நன்னா வாரிண்டு வர்றப்பையே ரெண்டு மூணு சொட்டை தல பெருசுகள் பொறாமைல பொசுங்கி, இருடா! வரேன்னு மனசுல நினைச்சுண்டு, பொண்ணு காதுல அப்பளம் ஒடைக்கற ஒடப்புல எல்லா அப்பளமும் அவன் தல மேல தான் விழணும்னு ஓதுவா! ஏன்னா அப்பளத்த எடுக்கறப்போ தலையும் கலைஞ்சு போயிடும். .அந்த வேஷத்த போடோவும் VIDEOVUM எடுத்து நம்ம சரா சரிய வெறுப்பேத்தி அதுல ஒரு அல்ப சந்தோஷம் பட்டுப்பா இப்படியாக ஒரு வழியா நலுங்கு முடியும்..




மாலை நேரம் reception. கையில பூ செண்ட கொடுத்து சுமார் நாலு மணி நேரம் நிக்க வச்சு oru cool drinksayum பக்கத்துல வச்சு அத தொடவும் விட மாட்டா! Photographer தொல்லை பெரும் தொல்லை! சார் நீங்க இப்படி சிரிங்க அப்படி சிரிங்க அவங்க தோள்ல கைய வச்சு அங்க பார்த்து இப்படி சிரிங்கன்னு சொல்லி நம்மாள சிரியா சிரிக்க வச்சுடுவான்! ஒவ்வொருத்தரா மேடைல ஏறி பொண்ணுகிட்ட ஒருத்தர் பைய்யன் கிட்ட ஒருத்தர் நின்னு போட்டோ எடுத்துப்பா! பொண்ணு பையன் கிட்ட இவர் எங்காத்து பக்கத்துல அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இருந்தார்னு intro பண்ணி நம்ம சராசரி அப்பையும் ஈன்னு இளிப்பான். அத வேற போட்டோ எடுப்பா! ஒரு வழியா reception mudinju வரதுக்குள்ள நம்மாளு வெறுத்து போய் இனிமே வாழ்க்கையில கல்யாணமே பண்ண மாட்டேன்டான்னு மனசுக்குள் நெனைச்சுப்பான்! அப்ப பார்த்து இதுதான் ஜனனி! என்னோட கசின்னு அசின் மாதிரி ஒரு சூப்பர் டிக்கெட்ட introduce பண்ணுவா நம்ம சராசரியோட பொண்டாட்டி! நம்ம சராசரிக்கு அப்பத்தான் ஏண்டா இப்ப கல்யாணம் பண்ணிண்டோம்னு ஒரு நெனப்பு வந்து ஒரு முழி முழிப்பார்.....

இப்போ பர்ஸ்ட் நைட் ! இத பத்தி எல்லாம் சொல்ல முடியாது! இது சென்சார் செஞ்சாச்சு! நீங்களே என்ன நடந்திற்க்கும்னு கற்பனை பண்ணிக்கோங்கோ!

அன்புடன்

விநோதமனவன் !

3 comments:

  1. ithe ithethan nadanduchi en lifela[:P].. ana oru change janavasathu anniku reception appuram salemla taniay oru recetpion

    ReplyDelete
  2. super senthu..
    nee engaiyo pooita..

    ReplyDelete
  3. யோவ் வினோத்! வர வர உன் ரவுசு தாங்க முடில..!

    ReplyDelete