Friday, December 18, 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த தலைப்பில் எழுத வேண்டும் என ஆசை. இன்று தான் முயற்சி செய்கிறேன்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி? அநேகமாக நாம் எல்லோரும் இதை ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். இப்போது பார்ப்போமே! நமது நாயகன் பஞ்சு(கற்பனை பெயர்) என்ன சொல்ற்ரான்னு.

ஏண்ணா! உங்க ராசி மீனம் தானே! என்னடி கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சு இப்ப கேக்கற! கேட்டா சொல்ல வேண்டியது தான! அத விட்டுட்டு மூணு வருஷம் முப்பது வருஷம்னு டயலாக் அடிக்கறேல். நம்ம பஞ்சுவோட மனைவி கல்யாணம் ஆனா புதுசுல எப்படி இருந்தாலோ அதுக்கு அப்படியே உல்டா. இப்ப எல்லாம் பஞ்ச் டயலாக் இல்லாம பேசறதே இல்ல.

ஆமா! மீனம் தான்! என்ன விஷயம்! உங்க ராசிக்கு என்ன போட்டிருக்கான்னு பாக்கறேன்!.. அதுல என்னடி பாக்கற! என்ன கேளு நான் சொல்றேன்.
நம்மளோட மனைவி(ஜானுன்னு வச்சுப்போமே) ரொம்ப தெனாவெட்டா என்ன போட்டிருக்கான்? இன்று சக ஊழியரின் விடுப்பால் அதிக ப்ணி சுமையை சந்திக்கலாம்னு போட்டிருப்பான்..
ஜானு ஆச்சரியமாக எப்படின்னா? கரெக்ட். ஒன்னுமில்லடி எனக்கு எப்பவுமே இப்படிதான் போட்டிருப்பான்.

அன்றைக்கு வேலை சுமூகமாக முடிஞ்சு விட்டது! அப்பாடி இன்னிக்கி சீக்கிரம் ஆத்துக்கு சீக்கிரம் போய்டலாம் ஜானு அவாத்துக்கு போயிருக்கா! சீக்கிரம் போயிடோம்னா, நன்னா படம் பார்த்துட்டு, புக் படிச்சிட்டு., கம்பூட்டர்ல புது ப்ரென்ட் நந்திதா வருவா! 7 மணிக்கு ! அவளோட கொஞ்ச (கொஞ்சல்(ஜொள்ளோட) நேரம் சாட்டிங் பண்ணலாம், மெலடி சாங் கேட்டுண்டே படிக்கலான்னு மனசுக்குள் மத்தளம் கொட்டியபடி நைசாக பேக எடுத்துண்டு வந்தாச்சு.
பஸ் ஸ்டாப்ல பஸ்சுக்கு வைட்டிங்.
என்னிக்குமே அந்த நேரத்திற்கு வர பஸ் அன்னிக்கும் வந்தது அப்படியே நிக்காமல் சென்றது!
அரைமணி நேரம் கழித்து ஒரு பஸ் வந்தது. நின்னது ஆனால் பஞ்சுவிற்கு தான் நிக்க முடியவில்லை அப்படி ஒரு கூட்டம்.

பஞ்சுவிற்கு தந்து கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை pola ஒரு தோற்றம் மனசுக்குள். அடுத்த அரைமணிநேரம் கழிச்சு வந்த பஸ்சில் ஏறி ஒரு பத்தடி இருக்கும் பஸ் நின்னு போச்சு ஒரு அசகாய குலுங்கலுடன்..என்னவோ பஸ்ஸுகே பஞ்சுவை ஏற்றியது பிடிக்காமல் போனது போல். ஒரு வழியாக பஸ்ஸை இறங்கி தள்ளி ஏறி வீட்டிற்க்கு வந்தால் மணி எட்டரை .குளித்துவிட்டு இருந்த சாதத்தை போட்டு மோரை விட்டு கரைத்து குடித்துவிட்டு
அட் லீஸ்ட் t.v பாப்போம் என்று ஆன் செய்தோன ஆன் செஞ்சோமா இல்ல ஆப் செஞ்சோமாங்கற மாதிரி t.v ஆப் ஆனது என்னடான்னு பார்த்தால் கரண்ட் கட்.
மனதிற்குள் மெலடி சாங் , புக், சாட்டிங் எல்லாம் சௌபாக்யா வெட் கிரைண்டரில் அரைத்த மாவைப் போல ஆனதை நினைத்து..கொண்டு.டேய் ! பஞ்சு உனக்கு மட்டும் ஏன்டா இப்படி!
ஹல்லோ பஞ்சுங்கறது நாம எல்லோரும்தான். வினோத் மட்டும் இல்லை...

அன்புடன்
வினோதமானவன்.



Thursday, December 17, 2009

இது என்னுனடைய நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது. வயிற்று வலி மாத்திரையை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி


"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –



நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.


"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."


"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.


"சரி"


இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".


இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.



காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.


"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?


"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."


"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.


"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"


"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"



"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"


"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.


ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.



"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.


"CR-னா?"


"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."



அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"


"ஒத்துகிட்டு தான் ஆகணும்.


முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"


"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"



"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."


"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."


"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."


"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.


"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."


"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."


"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"


"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."


"நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."


"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"


"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."


"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"


"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம்கறது மாதிரி."


"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"


"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"


"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"


"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."


"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".


"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"


"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."


"அப்புறம்?"


"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."


"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.


"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Wednesday, November 11, 2009

எழுத பிடிக்காத கட்டுரை.

இது ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளி வந்த ஒரு வாசகத்தின் தமிழாக்கம்.

நீ காலையில் எழுந்தவுடன் உன் மனைவியை அடித்து உதை. ஏன் அடிக்கிறோமென்று உனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உன் மனைவிக்கு நன்றாக தெரியும் ஏன் அடி வாங்குறோம்மென்று.
இதன் அர்த்தம் யாருக்காவது புரிகிறதா...

அன்புடன்
வினோதமானவன்.

Friday, August 7, 2009

நம் சராசரியின் குடும்பம் (சரணாலயம்)


நம் சராசரியின் குடும்பம் வித்யாசமானது தெரியுமோ! நம் சராசரி வீட்டிற்கு நடுப்பிள்ளையாகவோ அல்லது கடைசிப்பிள்ளையாகவோ தான் இருப்பார்.
ஆத்துக்கு செல்லப்பிள்ளைன்னு ஏமாத்தி எல்லா வேலையும் நம் சராசரியின் தலையில் தான் விடியும்.

டேய் கண்ணா சமத்தோன்னோ! போய் பால் வாங்கிண்டு வாடா. இது அம்மா.
டேய் ஸ்க்குல்லெர்ந்து வரப்ப நம்ம விநாயகா cycle கடையில நம்மாத்து cyclela puncture ஒட்ட கொடுத்திருக்கேன். வரப்ப வாங்கிண்டு வந்துடு. தள்ளிண்டு வா! ஒட்டாதே. அப்புறம் எங்கேயாவது விழுந்து வச்சேன்னா மறுபடியும் தண்டம் அழனும். இது அண்ணா.

டேய் கண்ணா! என் செல்லம் இல்ல. please போய் hair pin வாங்கிண்டு வாடா! இது அக்கா! இப்படி எல்லா வேலையையும் வாங்கிண்டு யாரவது relatives வரப்ப இவன் தான் எங்காத்து கடைக்குட்டி, ஆனா கொஞ்சம் முசுடுன்னு ஒரு முத்திரை குத்திடுவா.

இதுல என்ன விசேஷம்னா கடைசில நம்ம சராசரியா அசடா அடிக்கறது தான். மாமி, உங்காத்து vaccum cleaner கொஞ்சம் தரேளா? ன்னு எதிர்த்தாத்து பங்கஜம் மாமி கேப்பா. உடனே நம்ம சராசரியின் அம்மா ஒ! அது work ஆகலை போலிருக்கே. இன்னும் ஒக்க பண்ணலையே!(not working or have not repaired). இப்போ நம்ம சராசரி ரொம்ப அப்பாவியா உலகம் புரியாம இன்னிக்கு போட்டேனே! work ஆச்சே!ன்னு சொல்ல, அம்மா ரொம்ப அப்பாவியா மூஞ்சிய வச்சுண்டு (சிவாஜி இல்ல hollywood actor marlon brando கூட தோத்துடுவான்) ஒ! உங்கப்பா சரி பண்ணிட்டாளா?எங்கிட்ட சொல்லவே இல்லையே. தேவையில்லாம வாருக்கட்டைய வச்சு பெருக்கினேனே. அப்படின்னு அசடு வழிய சொல்ல, எதிர்த்தாத்து மாமி சின்ன நக்கல் சிரிப்போட நம்ம சராசரியா பார்த்து சமத்துடான்னு வேற சொல்லுவா. அம்மா vaccum cleanera கொடுத்துட்டு சராசரிய ஒரு போடு போட்டு(மனசுக்குள்ள சமத்தாம் சமத்து சுத்த அசத்து அப்பன மாதிரியே பொறந்திருக்கு உதாவாக்கரை ) கடன்காரா நேக்கு தெரியாதா?

இப்ப அந்த்தாத்து வானரங்கள் நம்ம cleanara ரெண்டாத்தான் கொடுக்கபோரதுன்னு சொல்லிண்டே முதுகுல ஓங்கி ஒரு போடு போட்டு பெரியவா பேசறப்ப வந்தேன்னா இருக்கு சேதின்னு வேற திட்டுவா. நம்ம சராசரி கடைசியில் இ தி கு (இஞ்சி தின்ன குரங்காட்டம்) மூஞ்சிய வச்சுண்டே பரிதாபமா போவார். அவர் குழந்தையா இருந்ததிலேர்ந்து அவருக்கு குழந்தை பிறக்கிற மட்டும் அசடாகவே அடிக்கப்பட்ட நம்ம சராசரி பாவம் தான் இல்லையா!

இப்படி எழுதறேன்னே நான் சராசரியா? haiyoo haiyoo! சராசரியாம்ள! avvvvvvvvvvv..........
அன்புடன்
விநோதமனவன்.

Friday, July 31, 2009

கல்யாணம் ஆகி நூறு நாள் part 2

மறு நாள் காலையிலும் சராசரி mood outla இருப்பார். அப்போ அவரோட புது பொண்டாட்டி tiffen box bagla இருக்கு. நம் சராசரி மனசுக்குள் "bagla இல்லாம மண்டைகுள்ளயா இருக்கும்." உடனே அவரோட புது பொண்டாட்டி ஏன்னா சாயந்திரம் சீக்கிரம் வந்திடுங்கோ! நம் சராசரி ம்ம் பார்க்கலாம். bikela உட்கார்ந்தோன normal moodukku வந்திடுவார். யாரும் பார்க்கரளான்னு பார்த்துண்டே புது பொண்டாட்டிக்கு oru flying kiss கொடுப்பார். ஆனா இத மெனக்கட்டு அவரோட மருமாள் பார்த்துட்டு பாட்டி பாட்டி மாமா, மாமிக்கு flying kiss கொடுத்தான்னு stero effectla high pitchla கத்திகொண்டே ஓடுவா. இத ஊரே பார்க்கும். நம் சராசரியின் பொண்டாட்டி மண்டையில அடிச்ச்சுகொண்டே உள்ள போவா.
officukku போனோன ஆத்துல இருந்து call வரும், officukku வந்தாச்சான்னு! அது வரைக்கும் தெளிவா இருந்த மூஞ்சில மறுபடி ஒரு அசட்டுக்களை வந்து அப்பிண்டுவிடும்! மதியம் lunch boxa open பண்ணினா ஒரு romantic letteroda lunch. எப்படா 5.30 மணி ஆகப்போரதுன்னு மணிக்கு நாலு தடவை வாச்சை பார்த்துண்டே இருப்பார் நம்ம சராசரி. அப்போ பார்த்து officela இருக்கிற watch எல்லாம் நாலு மணிய விட்டு நகருவேனானு அடம் பிடிக்கும்.
சாயந்திரம் பூ வாங்கிண்டு ஆத்துக்கு போனா அம்மாவோட நாலு friends ஆத்துக்கு வந்து உட்கார்ந்துகொண்டு இருப்பா! நம்ம சராசரி மனசுக்குள் இவங்களுக்கு வேற வேலையே கிடையாதா? சாயந்திரம் பொண்டாட்டியோட தனிய ஏகாந்தமா இருக்கிறது இவாளுக்கு பிடிக்காதோன்னு மனசுக்குள் திட்டிகொண்டே அவாள பார்த்து அசட்டு சிரிப்ப சிரிச்சுண்டே வருவான். சரி! வந்தவா சீக்கிரம் ஆசிர்வாதம் பண்ணிட்டு காபி குடிச்சுட்டு கிளம்புவானு பார்த்த நன்னா சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு ஊர்க்கதை பேசி, நம் சராசரியின் office ஷேமங்கள பத்தி விசாரிச்சு நம் சராசரியை ப்ளேடு போட்டு கிளம்பறப்ப மணி எட்டயிடும். இப்படியாக நம் சராசரியின் ஒவ்வொரு மாலையும் வேறு யரோவோட மாலையாக மாறி நம் சராசரி வெறுத்து போய் இருப்பார்.
Week end leave. நம் சராசரியின் மனைவி, ஏன்னா! இந்த வாரம் எங்கேயாவது போலாமா? நம் சராசரியும் சரி போகலாம். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு போகலாம்னு சொல்ல, நம்மாளோட மனைவி புருஷனை ஒரு பண்டாரத்த பார்க்கறா மாதிரி ஒரு பார்வை பார்த்து, அதெல்லாம் ஒன்னும் வேணாம்! சத்யத்துல வில்லு ஓடறது அதுக்கு போகலாம், அப்படியே ஆத்துக்கு வரப்ப roof garden restaurentla சாப்டுட்டு வரலாம்னு சொல்ல, சராசரி மண்டைய மண்டைய ஆட்டிட்டு, இரு நான் அம்மாகிட்ட ஒரு வார்த்த சொல்லிண்டு வந்துடறேன்னு ஓடுவார் . Wife முனகிண்டே பின்னிண்டுருப்பா! எப்ப பார்த்தாலும் ஒரு அம்மா! தும்மல் போட்ட கூட அம்மாகிட்ட சொல்லணும். சரியான அம்மா கோண்டு! இப்படியா அசமஞ்சமா இருக்கிறதுன்னு முனகுவா.
ஹலோ போதும்! என்ன பார்கறேள்? உங்களுக்கு தெரியாதா? ladies always won. சரி நீங்க கேக்கிறது நேக்கு புரியறது. நீங்க எப்படி? சராசரியா? நாங்கெல்லாம் சிங்கம்ல!
அன்புடன்
வினோதமானவன்.

சராசரியின் கல்யாணம் முடிந்து நூறு நாள்! Part 1.

கேக்கறதுக்கு நன்னா இருக்கு இல்லையா! ஆனா முதல் நாளிலிருந்து நூறாவது நாளுக்குள் முதல் வசந்தமும், ஜல்லிக்கட்டும் நடந்து அமைதிப்படையும் வந்து நூறாவது நாளை தொடும் பொழுது, ஹா! மிகப் பெரிய வெற்றிதான்!

சரி! நமது சராசரியின் கல்யாணத்திற்கு பிறகு முதல் நாள், நான் சொல்றேன் கேளுங்கோ! மிக சத்தியமாய் கிறுக்கனாய் அடித்து விடும். முதல் இரவு முடிந்தோனையே ஒரு அசட்டுக்களை சராசரியின் முகத்தில் ஒட்டிக்கொண்டு விடும். மறுநாள் காலை கண்ணாடியை பார்த்தால் நம் சராசரிக்கே ஒரு நிமிஷம் தோனிவிடும் ! இது என்ன அசட்டுக்களை என்று.

மறுநாள் காலை மெதுவாக பேச்சு கொடுப்பாள் அம்மா! டேய் இன்னிக்கு அத்திம்பேர் ஆத்துக்கு போகணும் நீ! அங்க விருந்து சாப்பாடு இருக்கு! கிளம்பறப்ப மறக்காம நமஸ்காரம் பண்ணிடு! அபிவாதயே சொல்ல மறந்திடாத! அப்படியே அங்கேயிருந்து அத்திம்பேர் அப்பா ஆத்துக்கு போய் ஒரு நமஸ்காரம் பண்ணிடு! உடனே நம்ம சராசரி சரிம்மா பண்ணிடறேன்! இப்படி சொன்னால் போதும் சராசரியின் ஆத்துக்காரி ஒரு பார்வை பார்ப்பா பாருங்கோ, 100km ஓடின bike silencer heatta விட சூடு இருக்கும் அவ பார்வையில.

அத்திம்பேர் ஆத்துக்கு போயாச்சு! வாடா! புது மாபிள்ளை! எப்படிடா இருக்க! நம்ம சராசரியின் மூஞ்சிய பார்த்தோனையே தெரியும் பயலுக்கு சவக்களை வந்தாச்சுன்னு!
இதுல ஒரு அல்ப சந்தோஷம் அவருக்கு! ம்ம் நம்ம ஜோதில ஒருத்தன் புதுசா கலந்துட்டான்னு! அக்கா சராசரியோட ஆத்துக்காரிய கிச்சனுக்குள்ள தள்ளிண்டு போயிட்டு, டேய் இவள எதாவது இம்சை பன்றியாடா? ஒன்னோட வால சுருட்டி வச்சுன்ன்டு இரு புரியறதா? இதுல சராசரியின் ஆத்துக்காரிக்கு ஒரு சந்தோஷம், ஒரு செட்டு சேர்த்தாச்சுன்னு. அப்ப அவ மூஞ்சில ஒரு அசட்டுக்கர்வம் தெரியும். நான் சொல்றேன் அந்த expressiona எந்த artistum தர முடியாது. ஒரு வழியாக விருந்து முடிஞ்சு பாலும் பழமும் கொடுத்து விருந்த வாந்தி எடுக்க வைக்கிற கொடுமையும் நடக்கும். இதுல யார் வாந்தி எடுத்தாலும் கஷ்டம் தான்.

பொண்ணு எடுத்தா, டேய்! எப்படிடா? ரெண்டு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ளயா! கில்லாடிடா நீ! ன்னு கிண்டல் பண்ணுவா! அதுவே நம்ம சராசரி எடுத்தா, என்னடா நீ போய் வாந்தி எடுக்கிற அவள்ன்னா எடுக்கணும், இங்க என்ன தலைகீழா நடக்கிரதுன்னும் கிண்டல் பண்ணுவா.
sirukku 10 நாள் போனதே தெரியாது. 11 ஆவது நாள் காலை officukku போகனும்ங்க்ரதே நம்மாளுக்கு வேப்பங்காயா இருக்கும். பயங்கர மூட் outla இருப்பார்.
நம்ம சராசரியின் பொண்டாட்டி ஏன்னா! ம்ம் ஏன்னா! ம்ம்ம்! ஏன்னா! என்ன்ன! first சண்டை! நாளைக்கு போகனும்மா! ஆமா! ஆமா! ஆமா! அதுக்கு என் இப்படி கடுப்படிக்கரேள்! அடடா! என்ன என் தூங்க விடமட்டேன்கிற? சரி! தூங்குங்கோ! நன்னா தூங்குங்கோ!

part 1 இதோட முடிஞ்சது! part 2 வில் சந்திப்போம்!
அன்புடன்
வினோதமானவன்.

Monday, July 27, 2009

நமது சராசரியின் கல்யாணம்!

வணக்கம்! நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என் நம்புகிறேன்! சரி விஷயத்திற்கு வருவோம். என்னுடைய முதல் இரண்டு postingil சராசரியின் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதியிருந்தேன். இப்பொழுது அவரின் கல்யாணம் எப்படி நடந்திற்கும் என்று சிறு கற்பனை அல்லது அனுபவங்களின் கலவையில் ஒரு படைப்பு!



நமது சராசரி பட்டபடிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் வேலை தேடிண்டு இருக்கிறப்ப , வீட்டில் அம்மா ஒரு மதிய நேரம் ஏன்டா நீ ப்ரீயாதான இருக்க போயி நம்ம நாடார் கடையில ஒரு நூறு ml நல்லெண்ணெய் வாங்கிண்டு வா! (இது தான் முதல் அலாரம். என்ன அர்த்தம் தெரியுமோ? சீக்கிரம் வேலை தேடிக்கோடான்னு). படிக்கற காலத்துல அப்பா சராசரிய பார்த்து ப்ளேடு வாங்கிண்டு வர சொன்னா, அம்மா "குழந்தைய கடைக்கு அனுப்பதீங்கோ"! அவனுக்கு நாளைக்கு பரிட்சைன்னு சொல்லுவா! அதே அம்மா வேலை கிடைக்கலேன்னா அப்படியே உல்டா!



சரி! நம்ம சராசரிக்கு வேலை கிடைச்சாச்சு! அம்மா நேக்கு வேலை கிடைச்சாச்சு! உடனே எவ்வளோடா சம்பளம்! பிடிச்சமெல்லாம் போக கைக்கு ஒரு எட்டாயிரம் ரூபா வரும்மா! பரவா இல்லடா! நல்லது இனிமே ஊர் சுத்தாத! நல்ல பையனா இரு. எப்படா இன்க்ரிமென்ட்?. இப்ப தான் ஆர்டேரே வாங்கிருப்பார் நம்ம சராசரி! ஞேன்னு ஒரு முழி முழிப்பார் பாருங்கோ! இது தான் முதல் முழி! daily routine started. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பக்கத்தாத்து பட்டு மாமி ஒரு மாலை பொழுதில் ஆத்துக்கு வரப்ப, ஏண்டி பார்வதி! எப்போடி உன் புள்ளையாண்டானுக்கு கல்யாணம் பண்றதா உத்தேசம்! நம்ம சராசரி ரூம் உள்ள தான் ஏதோ புஸ்தகத்த பொரட்டியபடி இருப்பார் . சமயத்தில் இடி விழுந்தா கூட காது கேக்காது! ஆனா கல்யாணம்னு சத்தம் கேட்டோன, காது ரூமில் இருந்து தனியா பறந்து போய் அந்த மாமியின் வாய்க்கு பக்கத்துல உட்கார்ந்துடும்.

நம்ம சராசரியின் அம்மா கல்யாணமா! இவனுக்கா! பொறுப்பே இல்லாம சுத்தறான் மாமி. கல்யாணம் பண்ணிண்டா எல்லாம் சரியாய் போயிடும்னு மாமி சொல்ல, நம்ம சராசரி மாமிய பார்த்து தெய்வமே என்று மனதிற்குள் புகழத் தொடங்கிடுவான். கல்யாணம் முடிஞ்சோன அதே மாமிய கொல்லாம விடமாட்டேன் சொல்லுவான் அது அப்புறம்..



எங்காத்து சைட்ல ஒரு பொண்ணு இருக்கா! என்னோட ஒர்ப்படியோட நாத்தனார் பொண்ணு! நீ கூட பார்த்திருப்பியே நம்ம நீலு கல்யாணத்துல! கிளிபச்சையில ரெட் பார்டர் போட்டுண்டு வந்தாளே! நம்ம சராசரியின் அம்மா, ஒ! அந்த பொண்ணா! கண்ணுக்கு லக்ஷணமா நன்னா தான் இருந்தா! நம்ம சராசரியும் அந்த கல்யாணத்திற்கு போயிருப்பார் ஆனா பாருங்கோ! அவர் பார்த்திருக்க மாட்டார்!

மாமி நான் அவர் கிட்ட சொல்றேன் . ஒரு நல்ல நாள் பார்த்து போய் பொண்ண பார்த்துட்டு வருவோம்..ஒரு பத்து நாள் கழித்து டேய் இன்னிக்கு 1 hr permission போட்டுட்டு வாடா. நம்ம சராசரி மனசுக்குள் ஒரு சந்தொஷம். ஏன் என்ன விஷயம்? இன்னிக்கு நோக்கு பொண்ணு பார்க்க போறதுடா! சரிம்மா! வந்துடறேன்!

சாயந்திரம் ஆத்துக்கு ஆபீஸ் முதலாளிக்கு ஐஸ் வச்சு சீக்கிரம் வந்து, குளிச்சு, சென்ட் அடிச்சு, பார்மல் டிரஸ் போட்டுண்டு கண்ணாடில பார்த்து.. அய்ய நன்னாவே இல்ல! அப்புறம் ஒரு வழியா ஒரு டிரெஸ்ஸ போட்டுண்டு, அம்மா கால் டாக்ஸி வந்தாச்சா? இன்னும் இல்லடா! அவசரமா மறுபடி கால் பண்ணி விரட்டி, குடும்பமே அந்த டாக்ஸி யில் திணிச்சுண்டு போய் இறங்கும்!


பெண்ணாத்துக்குள்ள போயாச்சு! பொண்ணோட அப்பா வாங்கோன்னு கூப்பிட, பொண்ணோட அம்மா புடவைய தோளோட சுத்திண்டு வாங்கோ மாமி! வந்து உக்காருங்கோ! பிரயாணம் எல்லாம் ஸௌரியம் தானே என்னமோ டெல்லிலேர்ந்து பொண்ணு பார்க்க வந்தா மாதிரி effect கொடுப்பா! நம் சராசரியின் மனசுக்குள் டாக்ஸியில் திணிச்சுண்டு வந்தது எனக்கு தான் தெரியும்னு சொல்லிப்பார். நம்ம சராசரி அப்படியே வீட்டின் ஹாலை பார்க்கறா மாதிரி பொண்ண தேடுவார். ஒரு 10 mins நம்மாள அலைய வச்சு பொண்ண கூபிடுவா! ஜானு காபி எடுத்துண்டு வாமா! நம்ம சராசரி தலைய குனிஞ்சுண்டே கப்பிய வாங்கி ஓர கண்ணால பொண்ண பார்ப்பார். அப்பா அவள் அவருக்கு ஏதோ ரதி தேவதை மாதிரியே இருக்கும்..(கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு பாத்ரூம் கண்ணாடிய பார்த்து உன்ன போய் ரதி தேவின்னு நினைச்சேனே ஐயோ அய்யோன்னு முட்டிப்பார்) அந்த பொண்ணோ ஒரு கேவலமான பார்வை பார்த்து hmm ok தான். பையன பார்த்தா பேக்கா தான் தெரியறான்! . நான் சொன்னத கேட்டா சரி. இந்த மாதிரி ஒரு பேக்கு புருஷனா இருந்தாதான் நம்ம ராஜ்யம் கொடி கட்டி பறக்கும்னு ok சொல்ல நம்ம சராசரி தனக்கு தானே சூன்யம் வச்சுண்டது தெரியாம மனசுக்குள் பாரதி ராஜா பட effectil சந்தோஷமா கிளம்புவார்.




ஜானுவோட ஜானுவாசம்! பலி கொடுக்கற ஆட்ட இழுத்துண்டு போறாப்ல சராசரிய அலங்காரம் பண்ணி வீதி வீதியா கூட்டிண்டு போவா! பாவம் நம் சராசரி. அப்போ அவனுக்கு தெரியாது கூட்டிண்டு போய் போடபோறான்னு! ஈன்னு இளிச்சுண்டே வருவான் பாவம். மறுநாள் காலை நாந்தி முடிஞ்சு முஹுர்த்தம்! மாலை மாற்றினால் கோதை மாலை சாத்தினாள்ன்னு யாரோமூக்கால பாடி அந்த நல்ல பாட்ட கொலை பண்ண, அப்பா மடில பொண்ண உக்கார வச்சு( அநேகமா அப்பாக்கள் எல்லோரும் மனசுக்குள் யப்பா என்ன weighttunnu மாபிள்ளைய பரிதாபமா ஒரு பார்வை பார்த்துண்டே என்னோட இம்சைய உனக்கு தானம் பண்றேன்னு நினைச்சுப்பார்னு நினைக்கிறன்) மாங்கல்ய தாரணம் பண்ணுவார் !



என்ன கல்யாணம் ஆச்சா! மாட்டு பொண்ணு வந்தாளா! மாபிள்ளை வந்தாரா(மாட்டிண்டானா)ன்னு? எல்லாரும் கேட்டு ஓஞ்சு, மதிய கல்யாண சாப்பாட்ல அந்த ஸ்வீட் எடுத்து பொண்ணுக்கு ஊட்டி விடுடானு! ஒரு கிழம் சொல்லும் அதே வேற photo எடுப்பாங்க புண்ணியவான்கள். இங்க போய் அலம்பு அங்க போயி அலம்புன்னு ஒரு கூட்டம் நம்ம நம்ம சராசரிய வறுத்தெடுக்கும். காபி குடிக்கறபோது டேய் போதும்! பாதிய உன் பொண்டாடிக்கு மிச்சம் வைடான்னு வேற சொல்லுவா. அங்க பார்த்தேள்னா ஒரு வாளி நெறைய காபி இருக்கும். ஆனா! எல்லார் கண்ணும் நம்ம சராசரியின் காபி மேல தான் இருக்கும்...




சரி சரி! லஞ்ச் முடிஞ்சு நலுங்கு வைபவம்! ஒரு மனுஷன கிறுக்கனா அடிக்கறதுக்கு இத விட வேற ஏதும் கிடையாது! நக்கல் பண்றோம்னு கொடும பண்ணுவா! ஆண்கள் ஒத்த கையில் தேங்காய அமுக்கி பிடிக்க பொண்ணு(திம்ஸ் கட்ட மாதிரி இருப்பா) ரெட்ட கைய்யாள இழுத்தோன நம்ம சராசரிக்கு ஒரு கைய்யே தனியா போற மாதிரி ஒரு effectla கையா விட்டுடுவான்! விஷயம் தெரியாம பெருசுகள் இவன் சரியில்லன்னு நக்கல் பண்ணுவா..நெறைய அப்பளம் எடுத்து தட்டுல வச்சுருப்பா! நம்ம சராசரி தலைய நன்னா வாரிண்டு வர்றப்பையே ரெண்டு மூணு சொட்டை தல பெருசுகள் பொறாமைல பொசுங்கி, இருடா! வரேன்னு மனசுல நினைச்சுண்டு, பொண்ணு காதுல அப்பளம் ஒடைக்கற ஒடப்புல எல்லா அப்பளமும் அவன் தல மேல தான் விழணும்னு ஓதுவா! ஏன்னா அப்பளத்த எடுக்கறப்போ தலையும் கலைஞ்சு போயிடும். .அந்த வேஷத்த போடோவும் VIDEOVUM எடுத்து நம்ம சரா சரிய வெறுப்பேத்தி அதுல ஒரு அல்ப சந்தோஷம் பட்டுப்பா இப்படியாக ஒரு வழியா நலுங்கு முடியும்..




மாலை நேரம் reception. கையில பூ செண்ட கொடுத்து சுமார் நாலு மணி நேரம் நிக்க வச்சு oru cool drinksayum பக்கத்துல வச்சு அத தொடவும் விட மாட்டா! Photographer தொல்லை பெரும் தொல்லை! சார் நீங்க இப்படி சிரிங்க அப்படி சிரிங்க அவங்க தோள்ல கைய வச்சு அங்க பார்த்து இப்படி சிரிங்கன்னு சொல்லி நம்மாள சிரியா சிரிக்க வச்சுடுவான்! ஒவ்வொருத்தரா மேடைல ஏறி பொண்ணுகிட்ட ஒருத்தர் பைய்யன் கிட்ட ஒருத்தர் நின்னு போட்டோ எடுத்துப்பா! பொண்ணு பையன் கிட்ட இவர் எங்காத்து பக்கத்துல அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இருந்தார்னு intro பண்ணி நம்ம சராசரி அப்பையும் ஈன்னு இளிப்பான். அத வேற போட்டோ எடுப்பா! ஒரு வழியா reception mudinju வரதுக்குள்ள நம்மாளு வெறுத்து போய் இனிமே வாழ்க்கையில கல்யாணமே பண்ண மாட்டேன்டான்னு மனசுக்குள் நெனைச்சுப்பான்! அப்ப பார்த்து இதுதான் ஜனனி! என்னோட கசின்னு அசின் மாதிரி ஒரு சூப்பர் டிக்கெட்ட introduce பண்ணுவா நம்ம சராசரியோட பொண்டாட்டி! நம்ம சராசரிக்கு அப்பத்தான் ஏண்டா இப்ப கல்யாணம் பண்ணிண்டோம்னு ஒரு நெனப்பு வந்து ஒரு முழி முழிப்பார்.....

இப்போ பர்ஸ்ட் நைட் ! இத பத்தி எல்லாம் சொல்ல முடியாது! இது சென்சார் செஞ்சாச்சு! நீங்களே என்ன நடந்திற்க்கும்னு கற்பனை பண்ணிக்கோங்கோ!

அன்புடன்

விநோதமனவன் !