Friday, December 18, 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த தலைப்பில் எழுத வேண்டும் என ஆசை. இன்று தான் முயற்சி செய்கிறேன்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி? அநேகமாக நாம் எல்லோரும் இதை ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். இப்போது பார்ப்போமே! நமது நாயகன் பஞ்சு(கற்பனை பெயர்) என்ன சொல்ற்ரான்னு.

ஏண்ணா! உங்க ராசி மீனம் தானே! என்னடி கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சு இப்ப கேக்கற! கேட்டா சொல்ல வேண்டியது தான! அத விட்டுட்டு மூணு வருஷம் முப்பது வருஷம்னு டயலாக் அடிக்கறேல். நம்ம பஞ்சுவோட மனைவி கல்யாணம் ஆனா புதுசுல எப்படி இருந்தாலோ அதுக்கு அப்படியே உல்டா. இப்ப எல்லாம் பஞ்ச் டயலாக் இல்லாம பேசறதே இல்ல.

ஆமா! மீனம் தான்! என்ன விஷயம்! உங்க ராசிக்கு என்ன போட்டிருக்கான்னு பாக்கறேன்!.. அதுல என்னடி பாக்கற! என்ன கேளு நான் சொல்றேன்.
நம்மளோட மனைவி(ஜானுன்னு வச்சுப்போமே) ரொம்ப தெனாவெட்டா என்ன போட்டிருக்கான்? இன்று சக ஊழியரின் விடுப்பால் அதிக ப்ணி சுமையை சந்திக்கலாம்னு போட்டிருப்பான்..
ஜானு ஆச்சரியமாக எப்படின்னா? கரெக்ட். ஒன்னுமில்லடி எனக்கு எப்பவுமே இப்படிதான் போட்டிருப்பான்.

அன்றைக்கு வேலை சுமூகமாக முடிஞ்சு விட்டது! அப்பாடி இன்னிக்கி சீக்கிரம் ஆத்துக்கு சீக்கிரம் போய்டலாம் ஜானு அவாத்துக்கு போயிருக்கா! சீக்கிரம் போயிடோம்னா, நன்னா படம் பார்த்துட்டு, புக் படிச்சிட்டு., கம்பூட்டர்ல புது ப்ரென்ட் நந்திதா வருவா! 7 மணிக்கு ! அவளோட கொஞ்ச (கொஞ்சல்(ஜொள்ளோட) நேரம் சாட்டிங் பண்ணலாம், மெலடி சாங் கேட்டுண்டே படிக்கலான்னு மனசுக்குள் மத்தளம் கொட்டியபடி நைசாக பேக எடுத்துண்டு வந்தாச்சு.
பஸ் ஸ்டாப்ல பஸ்சுக்கு வைட்டிங்.
என்னிக்குமே அந்த நேரத்திற்கு வர பஸ் அன்னிக்கும் வந்தது அப்படியே நிக்காமல் சென்றது!
அரைமணி நேரம் கழித்து ஒரு பஸ் வந்தது. நின்னது ஆனால் பஞ்சுவிற்கு தான் நிக்க முடியவில்லை அப்படி ஒரு கூட்டம்.

பஞ்சுவிற்கு தந்து கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை pola ஒரு தோற்றம் மனசுக்குள். அடுத்த அரைமணிநேரம் கழிச்சு வந்த பஸ்சில் ஏறி ஒரு பத்தடி இருக்கும் பஸ் நின்னு போச்சு ஒரு அசகாய குலுங்கலுடன்..என்னவோ பஸ்ஸுகே பஞ்சுவை ஏற்றியது பிடிக்காமல் போனது போல். ஒரு வழியாக பஸ்ஸை இறங்கி தள்ளி ஏறி வீட்டிற்க்கு வந்தால் மணி எட்டரை .குளித்துவிட்டு இருந்த சாதத்தை போட்டு மோரை விட்டு கரைத்து குடித்துவிட்டு
அட் லீஸ்ட் t.v பாப்போம் என்று ஆன் செய்தோன ஆன் செஞ்சோமா இல்ல ஆப் செஞ்சோமாங்கற மாதிரி t.v ஆப் ஆனது என்னடான்னு பார்த்தால் கரண்ட் கட்.
மனதிற்குள் மெலடி சாங் , புக், சாட்டிங் எல்லாம் சௌபாக்யா வெட் கிரைண்டரில் அரைத்த மாவைப் போல ஆனதை நினைத்து..கொண்டு.டேய் ! பஞ்சு உனக்கு மட்டும் ஏன்டா இப்படி!
ஹல்லோ பஞ்சுங்கறது நாம எல்லோரும்தான். வினோத் மட்டும் இல்லை...

அன்புடன்
வினோதமானவன்.



1 comment:

  1. Un mozhiyin maenmai enai paravasapaduthigiradhu :)

    gr8 work maapu

    ReplyDelete