Sunday, July 26, 2009

யார் நமது சராசரியின் எதிரிகள்?

உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்! யார் சராசரியின் எதிரி என்பதை அறிந்து கொண்டால்!



அலுவலக முதலாளியா? இல்லவே இல்லை. ஏனென்றால் உங்களின் வீட்டை பற்றிய எண்ணமோ அல்லது உங்களை பற்றிய எண்ணமோ அவனுக்கு கிடையாது. அவனுக்கு தேவை நீங்கள் productive ஆக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.



பிறகு யார் தான் எதிரிகள்? வேறு எங்கும் இல்லை , நமது வீட்டில் தான் உள்ளனர். ஹா இன்னிக்கு சீக்கிரமே வீட்டிற்கு வந்தாச்சா என்று கண்ணு வைக்கும எதிர் வீட்டு ராமானுஜமோ இல்லை வேறு யாராவதோ? இப்படி கேட்டுவிட்டால் போதும் சுமார் ஒரு மாதத்திற்க்காவது நீங்கள் நேரத்தோடு வருவதை நீங்கள் மறந்துவிட வேண்டியது தான்.

சரி! அவருக்கு எரிச்சலோடு புன்னகையை பதிலாய் கொடுத்துவிட்டு வீட்டில் நுழைந்தால் அருமை மனைவி அட வந்தாச்சா! உங்கள பத்தி நினைச்சேன் வந்துட்டேள்னு கொஞ்சும் பாவனயில் ஏன்னா நம்ம குட்டிக்கு பால் தீரபோறது( அது தீர இன்னும் ஒரு வாரம் ஆகும்) நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்களேன் ஒரு அரை மணிநேரம் கழித்து! என நைசாக துரத்துவாள்! சரி இது தான் சாக்கு என்று வெளியில் சென்றால் போகும் பொழுது அலாரம் வைத்தார் போல் தொ பாருங்கோ வெளில அங்க இங்க பராக்கு பார்க்காம ஆத்துக்கு சீக்கிரம் வந்துடுங்கோ! அதாவது சிறிது நேரம் வெளியில் கூட ஏகாந்தமாக இருக்கக்கூடாதாம். என்னே ஒரு பதிபக்தி. செல்லம் சொன்னாளேன்னு ஆத்துக்கு வந்துண்டு இருப்போம் அப்போ கரைக்க்டா போன் வரும் ஊர்லேர்ந்து போன் வந்தது அப்பாவும் அம்மாவும் வராள்னு..

நமது சராசரி முழிப்பார்! அப்பாவும் அம்மாவும் இங்க தான இருக்கா? உடனே மனைவி ஐயோ என்னோட அம்மாவும் அப்பாவும். தோ பாருங்கோ எங்க அப்பா முன்னாடி எப்ப பார்த்தாலும் அழுது வடியாதீங்கோ! அவர் எதாவது நெனைச்சுக்க போகிறார். அவர் முன்னாடி இந்த லுங்கி கட்டாதீங்கோ! அப்பாக்கு பிடிக்காது! உங்கள அரை லூசுன்னு நினைசுப்பார். நமது சராசரி மனதிற்குள் (லூசா! நானா!)


மனைவி மறுபடியும்..ஏன்னா அப்பா அம்மா வரப்ப கட்டிக்கறதுக்கு நல்ல புடவையே இல்ல நேக்கு ரெண்டு நல்லதா ஒரு ஆயிரம் ரூபா ரேஞ்சில வாங்கி தரேளா? நமது சராசரி வேறு வழி இல்லாமல் மண்டைய ஆட்டிடுவார்! சரி மாமனார் வந்திருக்கார்னு ஆபிஸ்லேர்ந்து வரப்ப எதாவது வாங்கி வந்தா மாமனார் எவ்வலோக்கு வாங்கினேல் மாபிள்ள அடடா உங்களுக்கு சமத்து போறாது என்று அவர் ஒரு certificate கொடுப்பார்..மாமியார் வந்ததும் வராததுமாக மாபிள்ள இது நானே பண்ணின ஸ்வீட்னு ஒன்னு தருவா பாருங்கோ! அவ்வளவுதான் நமது சராசரியின் மண்டைக்குள் மணி அடிக்கும்! அடேய் முதலாளி நாளேலேர்ந்து எனக்கு எக்ஸ்ட்ரா 4 hr வேலை கொடுடான்னு மனதிற்குள் வேண்ட தொடங்கிவிடுவார்.

சரி நீங்க கேக்கிறது என் காதுல விழறது யார் நம்ம சராசரியின் எதிரி! கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா! உங்களுக்கு தெரியாம வேற யாருக்கு தெரிய போறது? என்ன நான் சொல்றது?


அன்புடன்


விநோதமனவன்









1 comment:

  1. Vino, en ivlo latea start panni irukenga blog eltha.. summa kalakareenga tala

    ReplyDelete